அரசியலுக்கு வந்தால் திருமணம் இல்லை: பிரபல நடிகையின் பகீர் பேட்டி

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (11:10 IST)
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதால் அவர் விரைவில் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
 
இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதலளித்த கங்கனா, '“ராணுவ வீரர்கள் நாட்டுக்காக உயிரை கொடுத்து சேவை செய்கின்றனர். அதேபோல் தேவைப்பட்டால் நானும் தேசத்துக்கு சேவை செய்ய வருவேன். நான் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், குழந்தைகள் பெற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறினார்
 
இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற படத்திலும் 'குவீன்' உள்பட ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்