நாங்கள் இருவரும் முதலில் ஒரு பப்-ல் தான் சந்தித்தோம். பின் இமெயில் மூலமாக பேசத்தொடங்கினோம். இருவரும் காதல் வசப்பட்டோம். நாங்கள் காதல் சொல்லி இணைந்த நாள் நேற்று நடந்தது போல் உள்ளது. ஆம், நான் பதற்றத்தோடு கையில் மோதிரம் வைத்து அவரிடம் என் காதலை சொல்ல இருந்தேன், எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. அந்த நொடியில் அவர் மிகவும் எளிதாக ஒரு மோதிரத்தை டப்பாவில் இருந்து எடுத்து ஐ லவ் யூ என்று கூறிவிட்டார். என்னாள் சந்தோஷம் பொருக்க முடியவில்லை துள்ளி குதித்தேன்.