ஹைதராபாத் மாணவி கூட்டு வன்கொடுமை; ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 6 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:41 IST)
ஹைதராபாத்தில் மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால் ஆட்டோ வழக்கமான பாதையில் செல்லாமல் வழி மாறி சென்றதால் தான் கடத்தப்படுவதாக உணர்ந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதற்குள்ளாக மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் தனது நண்பர்கள் சிலருக்கு தகவல் தெரிவித்து வர செய்துள்ளார். அவர்கள் மாணவியை காரில் கடத்தி சென்று பழைய கட்டிடம் ஒன்றில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த பெண்ணை தாக்கியும் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்ட நிலையில் பெண்ணின் ஜிபிஎஸ்ஸை வைத்து இடத்தை கண்டுபிடித்த போலீஸார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் ராஜ் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்