என்கவுண்ட்டர் குற்றவாளிகளின் பிரேதப்பரிசோதனை அறிக்கை – உடலில் தங்காத குண்டுகள் !

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (08:39 IST)
பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிக்கி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட குற்றவாளிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வல்லுறவு செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய 4 குற்றவாளிகளை சைரதாபாத் போலிஸ் என்கவுண்ட்டர் செய்து சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்துள்ளது.

இப்போது குற்றவாளிகளின் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் 4 பேரின் உடல்களிலும் குண்டுகள் தங்கவில்லை என சொல்லப்படுகிறது. அப்படியானால் மிக அருகாமையில் இருந்துதான் சுடப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அப்போதுதான் குண்டுகள் உடலைத் துளைத்துக்கொண்டு வெளியேறியிருக்க முடியும். ஆனால் போலீஸாரோ குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டதாக சொல்லியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கருத்துகளும் முரணுடையதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்