பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (07:58 IST)
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி ஏற்பாடு செய்யப்படும் என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் சாகல்  தெரிவித்துள்ளார்
 
 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது
 
இதனை அடுத்து மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு சென்று அவர்களை ஊக்குவித்து முதல்வர் பூபேஷ் சாகல்,  பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சவாரி ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார் 
 
மாணவர்களை ஊக்குவிக்க இந்த முயற்சி செய்யப்படுவதாக முதல்வர் பூபேஷ் சாகல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்