ஒரே நாளில் தங்கம் விலை ரூ 512 உயர்வு - மத்திய பட்ஜெட் 2019-2020 !

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (11:15 IST)
நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் தங்கத்தின் விலை 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்ற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கையை சமர்பித்தார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பல்வேறு சலுகைகளை அறிவித்த அவர், சுய தொழில் முன்னேற்றத்திற்கும், அன்னிய முதலீட்டுக்கும், உள்நாட்டு வருவாயை மேம்படுத்தவும் பல திட்டங்களை அறிவித்துள்ளார். மேலும் தங்கத்துக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனால் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலைப் பவுன் ஒன்றுக்கு 512 ரூபாய் உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை ரூ 26,522 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இறக்குமதி வரி உயர்வால் தங்கத்தின் விலை விரைவில் 30,000 ரூபாயைத் தொடும் என வியாபாரிகள் ஆருடம் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்