கடவுள் அழகான உடலை கொடுத்திருக்கிறார் அதனால் நன்றாக ஆடைகளை அணியுங்கள் என்று பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்கு, அனுமன் ஜெயந்தி மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகியவற்றையொட்டி, நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், நான் இரவில் வீட்டை விட்டு வேளியா செல்லும்போது, நன்றாகப் படித்த இளம் மக்கள் மற்றும் குழந்தைகள், போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதைப் பார்த்தேன். உடனே காரில் இருந்து கீழிறிங்கி அவர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் போன்ற உணர்வு இருந்தது.
பெண்கள் சிலர் மோசமான உடைகளை அணிவதைப் பார்க்கிறோம்., அவர்கள் பெண் தெய்வங்களை வெளிப்படுத்தவில்லை. கடவுள் உங்களுக்கு அழகான உடலைக் கொடுத்திருக்கிறார். அதனால், நன்றான ஆடை அணியுங்கள் என்று கூறியுள்ளார்