உள்ள இருந்திருந்தா நடக்குறதே வேற..! – அணியின் தோல்வியை நேரில் கண்ட ரிஷப் பண்ட்!

புதன், 5 ஏப்ரல் 2023 (08:59 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா, மிட்ஷெல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்தது. அடுத்ததாக களம் இறங்கிய குஜராத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வர்த்தமான் சாஹா, சுப்மன் கில் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் சாய் சுதர்சன் நின்று நிதானமாக கடைசி வரை ஆடி அணியை வெற்றிபெற செய்தார்.

வழக்கமாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்படும் ரிஷப் பண்ட் சில நாட்கள் முன்னதாக கார் விபத்து ஒன்றில் சிக்கியதால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் தனது அணியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக ரிஷப் பண்ட் மைதானத்திற்கு வந்திருந்தார்.

அணியின் தோல்வியை அவர் காண நேர்ந்த நிலையில், அவர் அணியில் இருந்திருந்தால் அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என டெல்லி அணி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்