தெலுங்கானா மாநிலத்தில் தோழியின் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற 17 வயது கல்லூரி மாணவியை சக மாணவர்கள் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்த வக்கரமும் நடந்துள்ளது.
தெலுங்கானா கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
அந்த பிறந்தநாள் பார்ட்டியில் மாணவியுடன் படிக்கும் 4 மாணவர்கள் அவரை சந்தித்து பேசி தனியாக அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இந்த சம்பவத்தை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவத்தை வீட்டில் தெரிவிக்க, அவர்கள் பாதிக்கப்ப மாணவியுடன் கம்மம் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமைறைவாக உள்ள மாணவர்கள் 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.