சிம் கார்டு வாங்க விதிமுறை உள்பட இன்று முதல் என்னென்ன மாற்றங்கள்? இதோ ஒரு விரிவான தகவல்..

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (08:19 IST)
இன்று முதல் அதாவது ஜனவரி 1 முதல் சிம் கார்டு வாங்கும்போது உள்ள விதிமுறைகளில் மாற்றம் உள்பட சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்

ஜனவரி 1ம் தேதி புதிய சிம் கார்டு வாங்க விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.  அதன்படி ஒரு ஆதார் ஐடியில் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே சிம்களை வாங்க முடியும். தனிநபர்கள் 9 சிம் கார்டுகளை மட்டும் வாங்க முடியும்

மேலும் சிம் கார்டு வாங்க டிஜிட்டல் நோ யுவர் கஸ்டமர் (கேஒய்சி) செயல்முறை கட்டாயமாக்கப்படும். அதேபோல் வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் தரவை பெற வேண்டும்.

அதிகரித்து வரும் ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க  ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பினால் மீண்டும் அதே நபருக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்

இந்த நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர் இனி தாமதமாக தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்படாது. கூடுதலாக, தங்கள் வருமானத்தில் பிழைகள் உள்ள தனிநபர்கள் இனி திருத்தப்பட்ட வருமானத்தை சமர்ப்பிக்க முடியாது.

 ஜனவரி 1 முதல் ஐஆர்டிஏஐ பிறப்பித்த உத்தரவின் படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் பாலிசிதாரர்களுக்கு வாடிக்கையாளர் தகவல் தாளை வழங்குமாறு உத்தரவிட்டு உள்ளது.  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்