திருப்பதிக்கு ஜனவரி 1 வரை பக்தர்கள் வரவேண்டாம்: திருமலை தேவஸ்தானம்

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:56 IST)
திருப்பதிக்கு ஜனவரி 1 வரை பக்தர்கள் வரவேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
கிறிஸ்ட்ஜிமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி சொர்க்கவாசல் தரிசனத்திற்காகவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 1 வரை வழங்கி முடிந்துவிட்டது என்றும் டோக்கன் முடிந்து விட்டதால் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக இனிமேல் திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
மீண்டும் இலவச தரிசன டிக்கெட் ஜனவரி 2ஆம் தேதி மட்டுமே வழங்கப்படும் என்றும் டோக்கன் இல்லாமல் ஏழுமலையானை தரிசிக்க முடியாது என்பதால் பக்தர்கள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
எனவே இதுவரை டோக்கன் வாங்காத பக்தர்கள் திருப்பதி செல்லும் திட்டமிருந்தால் அதை ரத்து செய்துவிட்டு ஜனவரி 2ஆம் தேதிக்கு பின் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்