இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நீட்டிப்பு

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (14:30 IST)
பிரதமரின் இந்த ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே மாதம் மற்றும் ஜூன் மாதம் ஆகிய இரண்டு மாதங்களிலும் இந்தியாவில் உள்ள 80 கோடி மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசம் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 
 
இந்நிலையில், பிரதமரின் இந்த ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்