இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் 18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 6 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்பட்டது.
தற்போது 18 வயது முதல் 60 வரை உள்ள அனைவருக்கும் அரசு மருத்துவமனைகள் மூலமாக இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று முதல் 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.