தேடி வந்த எம்பி பதவி: அரசியலில் ரகுராம் ராஜன்??

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (17:46 IST)
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தனக்கு வந்த எம்பி பதவியை ஒதுக்கியதாகவும், தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி ரகுராம் ராஜனை தங்கள் கட்சியில் சேருமாறு அழைத்ததாகவும், ராஜ்யசபாவில் எம்பி பதவி தருவதாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரகுராம் ராஜன், எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் கிடையாது. பேராசிரியராகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளாராம். 
 
மேலும், தேசியவாதம் குறித்து தனது கருத்தை வெளிபடுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜனரஞ்சக தேசியவாதம் என்பது பொருளாதாரத்தை சீரழித்துவிடும். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வகை தேசியவாதம் பொருளாதாரத்தை பின்னோக்கி கொண்டு செல்லும். 
 
பெரும்பான்மை சமூகத்தினரின் உணர்வுகளை தூண்டிவிட்டுதான் ஜனரஞ்சக தேசியவாதம் செயல்படுகிறது. உலகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவிலும் இது போன்ற பிரசாரங்கள் உள்ளன.
 
தேசியவாதம் என்பதை நாட்டுப்பற்று என்பதோடு இணைந்தது அல்ல. இரண்டும் வேறு. இது சுய பச்சாதாபம் ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற இந்த வாதம் பயன்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்