மணிப்பூர் வன்முறையில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் சதி: ராணுவ முன்னாள் தலைமை தளபதி கருத்து

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (09:12 IST)
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் இந்த வன்முறைக்கு வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம் என முன்னாள் தலைமை ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மணிப்பூர் வன்முறை நிகழ்வுகளில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பின்னணி செயல்பாடுகள் இல்லை என்று கூற முடியாது என ராணுவ முன்னால் தலைமை தளபதி நரவனே கருத்து தெரிவித்துள்ளார். 
 
எல்லையோர மாநிலங்களின் பாதுகாப்பு நிலையில்லாது இருந்தால் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புக்கு அது ஆபத்தாக முடியும் என்று தெரிவித்தார். ஏற்கனவே மியான்மர் நாட்டிலிருந்து ஆயுதங்கள் மணிப்பூர் பகுதிக்கு கொண்டு வரப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் முன்னாள் ராணுவ தலைமை தளபதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்