4 ஆயிரம் கோடி நஷ்டம்..! ஸ்க்ராட்ச்ல இருந்து ஆரம்பிக்கிறேன்! – ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஃப்ளிப்கார்ட்!

Prasanth Karthick
திங்கள், 8 ஜனவரி 2024 (15:07 IST)
கடந்த ஆண்டில் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.



இந்தியாவில் பிரபலமாக உள்ள ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்று ஃப்ளிப்கார்ட். பெங்களூரை சேர்ந்த இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இந்த தளம் பின்னர் அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் பண்டிகை தின சிறப்பு விற்பனை, பிக் பில்லியன் டேஸ் என பல சலுகை விற்பனைகளை ஃப்ளிப்கார்ட் செய்து வருகிறது.

ALSO READ: இன்று மாலை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

எனினும் கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். இதனால் திறன் அடிப்படையில் தங்கள் பணியாளர்களை தரம் பிரித்து அதில் திறன் அடிப்படையில் கீழ் நிலையில் உள்ள 7 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக புதிதாக யாரையும் ஃப்ளிப்கார்ட் வேலைக்கு சேர்க்கவும் இல்லை. இந்த பணிநீக்க நடவடிக்கைகள் ஏப்ரலில் முழுமையாக முழுமையடையும் என கூறப்படுகிறது.

அதன் பின்னர் தங்கள் நிறுவனத்தில் உள்ள சிக்கல்களை கலைந்து திறன் மிக்க புதிய நபர்களை பணியமர்த்தி நிறுவனத்தை புதுப்பொலிவுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்