பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Mahendran

திங்கள், 8 ஜனவரி 2024 (11:11 IST)
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது 3 வயது பெண் குழந்தை கொல்லப்பட்டார்.
 
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குற்றவாளிகள் 11 பேர் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ALSO READ: மோடியின் ஒரே ஒரு லட்சத்தீவு பயணம்.. மாலத்தீவில் புக்கான 10,000 ஓட்டல் அறைகள் கேன்சல்..!
 
இந்தநிலையில் 11 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் பில்கிஸ் தரப்பில் மனுதாக்கல் செய்த நிலையில் இந்த மனுவின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
இந்த தீர்ப்பில் பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்றும், பில்கிஸ் பானு வழக்கு மராட்டியத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மராட்டிய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும்  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்