விஜய் பிரசாரம் எதிரொலி: நாகையில் மின்சாரத்தை நிறுத்திய மின்வாரியம்..!

Mahendran

சனி, 20 செப்டம்பர் 2025 (12:11 IST)
'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்காக நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
இன்று மதியம் நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் மக்களை சந்திக்க இருக்கிறார். இந்த நிகழ்விற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த முறை விஜய்யின் திருச்சி கூட்டத்தின்போது, அவரைப் பார்க்க ஆவலுடன் கூடிய தொண்டர்கள் உயரமான கட்டிடங்கள், மரங்கள் மற்றும் மின்கம்பங்களில் ஏறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். 
 
இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க, தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமார், மின் விநியோகத்தை நிறுத்த கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, விஜய் பிரசாரம் செய்யவிருக்கும் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், தொண்டர்கள் உயரமான இடங்களில் ஏறுவதைத் தடுக்க, விஜய் கட்சி ஏற்கனவே சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் யாரும் செல்ல கூடாது என்றும், அரசு அல்லது தனியார் கட்டிடங்களின் மீது ஏறக் கூடாது என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
விஜய்யின் பிரசார நிகழ்ச்சிகளுக்கு முன், இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது இது முதல்முறை அல்ல. எனினும், ஒரு அரசியல் தலைவரின் கூட்டத்திற்கு மின்தடையை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை செல்வது, அவரது மக்கள் செல்வாக்கை காட்டுவதாகக் கருதப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்