இந்த ஆண்டில் தொடர்ந்து 10வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயந்துள்ளது.
ஆம், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனால் எரிபொருள் விலை அதிக அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று விமான எரிபொருள் விலை 5.3% உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.6,188.25 உயர்ந்து ரூ.1,23,039.71க்கு விற்பனையானது. மும்பையில் ரூ.1,21,847.11க்கும், கொல்கத்தாவில் ரூ.1,27,854.60க்கும், சென்னையில் ரூ.1,27, 286.13க்கும் விற்கப்படுகிறது. உள்ளூர் வரி மாறுபடுவதன் காரணமாக இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது.