4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து : 2 சிறுவர்கள் பலி

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (19:10 IST)
டெல்லியின் ஷாகின் பாக் என்ற பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் தீடிரென்று தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
இவ்விபத்தில் முதல் தளம் முழுவதுமாக எரிந்தது. இரண்டாவது தளத்தில் தீ பரவுவதற்குள் விரைவாக தீயை அணைத்தனர். 
 
இதில் இரு குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்பாகவே உயிரிழந்தனர்.
 
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்