மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்; உலக வங்கி தலைவருடன் சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:14 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவர் உலக வங்கி தலைவரை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அமெரிக்காவுக்கு 6 நாள் அரசுமுறை பயணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செல்கிறார். இந்த பயணத்தின்போது அவர் சர்வதேச நாணய நிதியத்தின் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஆகியோரையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனித்தனியே சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் இலன் அவர்களை சந்திக்கும் நிர்மலா சீதாராமன், ஜப்பான், ரஷ்யா, சவூதி அரேபியா உள்பட பல நாடுகளின் நிதியமைச்சர்களையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்