மயிலாப்பூர் சந்தையில் காய்கறி விலையை விசாரித்தால் தீர்வு கிடைக்காது: ப.சிதம்பரம்

திங்கள், 10 அக்டோபர் 2022 (08:11 IST)
மயிலாப்பூரில் காய்கறி விலையை விசாரித்தால் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறி விலைகள் குறித்து விசாரித்தார். அதன் பின்னர் அவர் ஒரு சில காய்கறிகள் மற்றும் கீரைகள் வாங்கினார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகியது.
 
இந்த நிலையில் இது குறித்து விமர்சனம் செய்த முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், ‘மயிலாப்பூர் சந்தையில் காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் விலைவாசி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் விலைவாசி பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி கவர்னரே கூறியுள்ளார் என்றும் கடந்த 6 மாதங்களில் மட்டும் 2,000 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். எனவே அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான காலமாக இருக்காது என்றும் ப சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்