குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ ... கட்சியிலிருந்து நீக்கம் !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:42 IST)
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த பெண் எம்.எல்.ஏ ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாயாவதி. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவான ராமாபாய் பரிகார் என்பவர் குடியுரிமை திருத்த சட்டத்துகு ஆதரவளித்துள்ளார்.

எனவே, அக்கட்சியின் தலைவர் மாயாவதி, ராமாபாயை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்