ஆபாச படத்திற்கு அடிமையான மகனின் கையை கசாப்பு கத்தியால் வெட்டிய தந்தை

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (17:58 IST)
தெலங்கானாவில் ஆபாச படங்களுக்கு அடிமையான மகனின் கையை தந்தை ஒருவர் கசாப்பு கடை கத்தியால் துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
தெலங்கானா மாநிலம் பஹெடி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த காலித்(19) செல்போனில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். நாளடைவில் அவர் ஆபாச படங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் காலித்தை அவரது தந்தை குரேஷி எச்சரித்துள்ளார். ஆனால் காலித் தொடர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்து வந்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குரேஷி காலித்தை கண்டித்துள்ளார். இதனால் மகன், தந்தை இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காலித் தூங்கிக் கொண்டிருக்கும் போது குரேஷி, காலித்தின் கையை கசாப்பு கடை கத்தியை வைத்து துண்டாக வெட்டியுள்ளார். கை மணிக்கட்டிற்கு மேல் பகுதி துண்டாக்கப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து குரேஷியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்