இந்நிலையில் கஸ்தூரியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைத்தளத்தில் உலவ விட்டுள்ளனர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவேற்றம் செய்த நபர், ட்விட்டரில் நடிகை கஸ்தூரியிடம், ஒரு கீழ்த்தரமான கேள்வியை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி தன்னை கீழ்த்தரமாக திட்டிய நபருக்கு பதிலடி தரும் விதமாக, ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி ஆயிரம் ஏச்சு வருது... இக்னோர் பண்ணுறேன். ஏதாவது ஒன்னு ரெண்டுக்கு என்னையும் அடக்கமாட்டாம ரியாக்ட் பண்ணிடுறேன். மனசுல பட்டதை சொல்லியே பழக்கப்பட்டுட்டேன், இனி இன்னும் பொறுமையாக இருக்க முயல்கிறேன் என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.