நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்..! தமிழகத்திலும் வெடித்த போராட்டம்..!!

Senthil Velan
ஞாயிறு, 10 மார்ச் 2024 (13:09 IST)
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி படையெடுத்தனர்.
 
அப்போது விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். போலிசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை எனவும் மார்ச் 10-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்திருந்தார்.

ALSO READ: போதை பொருள் விற்பனை பணத்தில் தேர்தல் செலவா..? திமுக மீது எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு!!
 
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் காரைக்காலில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்