நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் நடனம்: விபரீதத்தில் முடிந்த விசித்திர பூஜை!

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (16:11 IST)
வட இந்தியாவில் உள்ள குவஹாத்தி என்னும் பகுதியில் குடும்பத்துடன் சேர்ந்து நடத்திய நிர்வாண பூஜை கலவரத்தில் முடிந்துள்ளது. 
 
குவஹாத்தியில் உள்ள கனகபாரா என்னும் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நள்ளிரவில் வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை தீயிட்டு எரித்து விட்டு நிர்வாண நடனம் ஆடி, நிர்வாண பூஜை மேற்கொண்டுள்ளனர். 
 
இந்த பூஜையையின் முடிவில் 3 வயது சிறுமி ஒருவர் நரபலி கொடுக்க நிர்வாண நிலையில் அங்கு இருந்துள்ளாள். நரபலி குறித்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவர அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், ஊடங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 
 
அவர்கள் வரும் வரை காத்திருக்காமல் ஊர்மக்களே அந்த சிறுமியை காப்பாற்ற முற்பட்டுள்ளனர். அப்போது பிரச்சனை ஆகியுள்ளது. அண்டஹ் சமயம் பார்த்து காவலர்களும் வர கைகலப்பை தடுக்க துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த துப்பாக்கி சூட்டில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவன் உயிரிழந்துள்ளான் மற்றவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியை போலீஸார் மீட்டனர். 
 
இதே குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிய வந்த நிலையில் அந்த பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டிருபாளா என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்