மகன் வீடியோ எடுக்க தீக்குளித்த தாய், தந்தை – உ.பி.யில் நடந்த கொடூரம் !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (11:21 IST)
உத்தரபிரதேசத்தில் ரௌடி ஒருவரால் ஏற்பட்ட தொல்லைப் பற்றி போலிஸில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கணவனும் மனைவியும் தீக்குளித்த சம்பவம் நடந்துள்ளது

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா என்ற கிராமத்தில் வசித்து தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அதேப் பகுதியைச் சேர்ந்த ரவுடியான சத்யபால் சிங் என்பவர் இந்த குடும்பத்துக்கு அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்ததாகவும் வீட்டுக்கே வந்து மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் போலிஸார் இதைப் பெரிதாக  எடுத்துக்கொள்ளாமல் சத்யபாலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த தம்பதியின் காவல் நிலையத்துக்குப் பின்புறம் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனை அவர்களது மகன் வீடியோவாக எடுத்துள்ளார்.

உடனடியாக அங்கு கூடியப் பொதுமக்கள் அவர்கள் மேல் உள்ள தீயை அணைத்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் உடலில் தீ அதிகளவில் பரவி திசுக்களை சேதப்படுத்தி இருப்பதாகவும், அதனால் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த ரவுடியைக் கைது செய்த போலிஸார், அவர் மேல் நடவடிக்கை எடுக்காத சப் இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்