’அமைதி குலைந்த’ பகுதியாக நாகலாந்து அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (08:11 IST)
நாகலாந்து ஆயுதப்படைச் சட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

 
பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு - காஷ்மீர், அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமலில் உள்ளது.
 
இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமலில் உள்ள ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தாண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை இந்த சட்டம் அமலில் இருக்கும்.
 
இதனால் நாகலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்