வெளிநாட்டு விமான சேவை தடை! ஜூலை 31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு

புதன், 30 ஜூன் 2021 (13:13 IST)
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவைகள் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் உலக நாடுகள் பலவும் இந்தியாவுடனான விமான சேவைகளை தடை செய்து அறிவித்திருந்தன.

ஜூன் 30 (இன்று) வரை சர்வதேச விமான சேவைகள் இந்தியாவில் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சிறப்பு விமானங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்