எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோயர்கள்: பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து..!

Mahendran
சனி, 20 ஜூலை 2024 (14:43 IST)
இந்திய பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் பத்து கோடி ஃபாலோயர்கள் கிடைத்துள்ளதை அடுத்து எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எலான் மாஸ்க் வாங்கிய நிலையில் தற்போது அந்த சமூக வலைதளம் உலகின் முன்னணி இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பிரபலங்களை பின்தொடர்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியின்  எக்ஸ் கணக்கை பின்பற்றுவோர் எண்ணிக்கை 10 கோடி என உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் வேறு எந்த அரசியல்வாதியையும் விட அதிக அளவான எண்ணிக்கையை பிரதமர் மோடி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அதிக ஃபாலோயர்கள் கொண்டு, உலக தலைவராக ஆனதற்கு பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
 
இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடியை அடுத்து ராகுல் காந்திக்கு 2.64 கோடி ஃபாலோயர்கள் , டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 2.75 கோடி ஃபாலோயர்கள் , அகிலேஷ் அளவுக்கு 1.99 கோடி ஃபாலோயர்கள்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா அதிபர் பைடன், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது, போப்பாண்டவர் ஆகியோர்களை விட பிரதமர் மோடி அதிக ஃபாலோயர்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்