உங்கள் மீது கொலை வழக்கு பதியலாம்… உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் தேர்தல் ஆணையம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:06 IST)
தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதியலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்களின் போது தேர்தல் ஆணையம் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்கவில்லை என்றும் அரசியல் கட்சிகள் விதிகளை மீறி பிரச்சாரம் செய்த போது நீங்கள் எல்லாம் வேற்று கிரகத்திலா இருந்தீர்கள், கொரோனா பரவலால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும் போது உங்கள் மீது கொலை வழக்குக் கூட பதியலாம் என ஒரு வழக்கின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வாய்வார்த்தையாக கூறினர். இது ஊடகங்களில் வெளியாகி பரவலாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்த நிலையில் அதை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இது சம்மந்தமாக இதுபோன்ற வாய்மொழி வார்த்தைகளை ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்