போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய கும்பல் கைது: 8 மாதங்களாக நடத்தியது அம்பலம்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:36 IST)
எட்டு மாதங்களாக ஓட்டல் அறையில் போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் போலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வரும் மக்களிடம் ரூ.500 முதல் 1000 வரை வசூல் செய்ததாக தெரிகிறது 
 
இந்த போலி போலீஸ் ஸ்டேஷனில் தினசரி ரூபாய் 500 ஊதியத்தில் 8 பேர் வேலை பார்த்ததாக விசாரணையில் தெரியவந்தது
 
ஒரிஜினல் போலீசார் வீட்டிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த போலி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 8 மாதங்களாக இயங்கியதை அங்கிருந்த ஒரிஜினல் போலீசாருக்கு தெரியாமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் 8 மாதங்களாக போலி போலீஸ் ஸ்டேஷன் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்