கலைஞனுக்கு அழுத்தம் தர வேண்டாம்- சரத்குமார்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (13:49 IST)
கர்நாடக அரசு மற்றும் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு நீர் தர மறுத்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி  காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் கூடிய நிலையில் தமிழகத்திற்கு  விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து,  கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்வு. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2528 கன அடியாக அதிகரிப்பு. இதனால் தமிழக விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில், காவிரி விவகாரத்தில் பெங்களூரில் சித்தா பட செய்தியாளர் சந்திப்பின்போது,  நடிகர் சித்தார்த் கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காவிரி விவகாரம் பற்றி நடிகர் சரத்குமார் இன்று பேட்டியளித்துள்ளார். அதில், காவிரி பிரச்சனையை நடிகர்கள் தீர்த்து வைக்க வேண்டிய தேவையில்லை. இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இந்த விவகாரத்தில் கலைஞனுக்கு அழுத்தம் தர வேண்டாம். கவனத்தில் கொள்ளாத   நிலை ஏற்பட்டு, போராட்டம் எழுந்தால் மக்களுக்காக ஒன்று சேர்ந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்