35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து?

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (15:53 IST)
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேசிய கட்சிகள் தற்போதே துவங்கியுள்ளதாக தெரிகிறது. வாஸ்து பிரச்சனை காரணமான 2019 தேர்தல் பணிகளை பாஜக தனது பழைய அலுவலகத்தில் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாம். 
காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது. ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மான விசாதத்தின் போது மோடியை வெளுத்து வாங்கியது, கட்சியினருக்கு மத்தியில் அவரின் மீதான நம்பிக்கையை கூட்டியுள்ளது. 
 
மேலும், காங்கிரஸ் கட்சி தரப்பில் இப்போதே தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாம். அதில் இளைஞர்களின் வாக்குகளை கவர 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியை ரத்து செய்யும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால், இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் கேட்டப்போது இந்த தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்