இறந்துவிட்டதாக தாயிடம் கூறி குழந்தையை விற்பனை செய்த மருத்துவர்கள் கைது..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (18:26 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசவதற்காக வந்த பெண்ணிடம் குழந்தை இறந்து விட்டதாக கூறி அந்த குழந்தையை மருத்துவர்கள் லட்சக்கணக்கில் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புஷ்பா தேவி என்பவர்  கடந்த மாதம் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 
 
சுய நினைவு திரும்பியவுடன் குழந்தை குறித்து தாய் கேட்டபோது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனார். ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதாக நம்பிய புஷ்பா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் புஷ்பா தேவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது இரண்டு மருத்துவர்கள் பிறந்த குழந்தையை அந்த பகுதியில் உள்ள கவுன்சிலருக்கு லட்ச கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்தது தெரியவந்தது. 
 
இதனை அடுத்து குழந்தையை மீட்ட காவல்துறையினர் தாயிடம் ஒப்படைத்ததோடு குழந்தையை விற்பனை செய்த மருத்துவர்கள் இருவரையும் கைது செய்தனர்.  மேலும் குழந்தையை வாங்கிய நபர் நேபாளத்துக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்