திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கர்ப்பம்?

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (15:24 IST)
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. 


 

 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
நடிகை பலாத்கார வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் போலீசார், சமீபத்தில் அவரின் வீட்டிற்கு சென்று  பல மணி நேரங்கள் விசாரணை செய்தனர். அப்போது, அவர் அழுது புலம்பியதாக செய்திகள் அப்போதே வெளியானது. 
 
இந்நிலையில்தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
 
நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் திலீப், அதன் பின் அவரை விவாகரத்து செய்து விட்டு, காவ்யா மாதவனை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்