விபச்சாரத்திற்காக இத்தனை பெண்களா? - போலீசார் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (15:30 IST)
விபச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த இளம்பெண்களை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர்.

 
நேபாள நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக இளம்பெண்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டை சேர்ந்த பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவல், டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

 
மேலும், போலீசாரோடு அந்த ஹோட்டலுக்கு சென்று நேற்று இரவு முழுவதும் சோதனை நடத்தினார். அப்போது, விபச்சார தொழில் செய்ய வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவதற்காக அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 39 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.  சில நாட்களுக்கு முன்பு டெல்லி வசந்த விகார் பகுதியில் டெல்லி போலீசார் 18 இளம் பெண்களை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விபச்சாரத்திற்காக பெண்கள் கடத்தபடுவது அதிகரித்துள்ளதால் டெல்லி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்