டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா! – டெல்லியில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (08:29 IST)
நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை வைரஸ்கள் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நாட்டின் தினசரி பாதிப்புகள் வழக்கத்தை விட வேகமாக உயர்ந்து வரும் நிலையில் மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

ஒமிக்ரான் தொற்று பரவலில் டெல்லி முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்