தனிநபர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் சலுகை – ரிசர்வ் வங்கி

Webdunia
புதன், 5 மே 2021 (18:05 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனால் பெரும்பாலான மாநிலங்களில் சித தளர்வுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் ,அற்று,  தொழில்நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள், மற்றும் தனிநபர்களுக்கு கடனுதலி மற்றும் தவணை சலுகைகளைப் பெருவதற்காக வாய்ப்பை  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாவது: சுமார் 25 கோடிகள் வரை தனிநபர்கள் மற்று, சிறு குறு நிறுவனங்கள் பெற்றிருந்தால் கடந்தாண்டு இந்த வசதியைப் பெறாமல் இருந்தால்,  கடந்த மார்ச் 31 ஆம்தேதிப்படி இந்தக் கடன் தவணையைச் செலுத்தி இருந்தாலும், இந்தச் சலுகைய்யைப் பெறலாம் எனக் கூறியுள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கியில் இந்தச் சலுகைவரும் செப்., 30 ஆ தேதிவரை வழங்கப்பட்டு பின்னர் இது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்