கவுதம் கம்பீருக்கு எதிராக பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (10:54 IST)
மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கட்டுமான நிறுவனத்தை இயக்கி வருகிறார். இதில் 17 வீடுகளை கட்ட ரூ.1.98 கோடி தொகையை கவுதம் கம்பீர் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் பணம் வாங்கிய பின்னரும் வீடு கட்டும் பணி தொடரவில்லை. 
 
இதனால் பாதிக்கப்பட்ட 17 பேர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் கம்பீர் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை.
 
இதனையடுத்து கவுதம் கம்பீருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்