முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று…தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (23:19 IST)
மஹாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யதாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்