தற்போது 8 மாநிலங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரச் செயலர் லால அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. அதிக உயிரிழப்புகளையும் பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. விரைவில் மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது 8 மாநிலங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரச் செயலாளர் லால் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம், கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது என எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு, கோவையில்சிலநாட்களாகவேமீண்டும்தொற்றுஅதிகரித்துவருவதால் ( 03-08-21) மீண்டும்புதியகட்டுப்பாடுகள்அமலுக்குவருவதாகஅறிவிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.