கொரோனா பாதிப்பு…. இந்தியாவுக்கு ஆறுதலான் விஷயம்!

Webdunia
வியாழன், 21 மே 2020 (07:45 IST)
கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை கம்மியாகவே உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் பாதிப்பு, பலி எண்ணிக்கை என எல்லாமே கம்மியாக உள்ளது.

இது பற்றி மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால்,’ கொரோனா பாதித்தவர்களில் 42,298 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இப்போது 61,149 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 சதவீதத்துக்குக் கம்மியானவர்கள் மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 சதவிகிதம் பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடந்து வருகிறது. 

உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 7.9 ஆக உள்ளது. அதே போல இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 0.2 சதவிகிதம் மட்டுமே இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குணமடைவோர் விகிதம் படிப்படியாக உயர்ந்து இன்று 39.62 சதவிகிதமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்