இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயலா மிக அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புயல் சேத மதிப்புகளை கணக்கிடவே 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என்றும் கூறினார்
மேலும் இந்த புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகவும், ஏராளமான வீடுகள் பள்ளி கட்டடங்கள் தொழிற்சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் புயல் பாதித்த பகுதிகளில் தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது