ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா! – இந்திய நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:16 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90,632 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 41,13,811 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த எண்ணிக்கைகளில் இது அதிகம் என கூறப்படுகிறது. இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக 70,626 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 31,80,865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்