மத்திய பிரதேசத்தில் திடீரென அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:40 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆரம்பம் முதலே கொரோனா கட்டுபாட்டுக்குள் வைக்கபப்ட்டு இருந்த நிலையில் இப்போது திடீரென அதிகமாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 437 பேர் பலியாகியுள்ளனர்.ஆரம்பம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளான மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகம் ஆகியவை இருந்தன. இந்நிலையில் திடீரென மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டியுள்ளது.

இந்தூர் மாவட்டத்தில் மட்டும் 842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாளில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1299 பேருக்குக் கொரோனா பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்