14 நாட்களில் இத்தனை லட்சம் பேருக்கு கொரோனாவா??

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:23 IST)
கடந்த 14 நாட்களில் மட்டும் 18 லட்சத்து 52 ஆயிரத்து 899 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக உள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் 18 லட்சத்து 52 ஆயிரத்து 899 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்