ஓட்டு போட்டவங்களுக்கு மோடி கொடுத்தது இதுதான்! ரயில் களேபரங்களை ஷேர் செய்து காங்கிரஸ் கிண்டல்!

Prasanth Karthick
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (12:38 IST)

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் மக்கள் கும்பமேளா செல்ல படும் பாடுகள் குறித்த வீடியோ ஒன்றை கேரள காங்கிரஸ் ஷேர் செய்து விமர்சித்துள்ளது.

 

உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவிற்கு செல்ல நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் புறப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உத்தர பிரதேசம் செல்லும் ரயில்கள் கூட்ட நெரிசலாகி வருகின்றன. மக்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் பல வழித்தடங்களில் இருந்தும் மத்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்தது. ஆனாலும் அந்த ரயில்கள் மக்கள் கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை.

 

தற்போது கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. அதில் வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் ரயிலுக்காக மக்கள் கூட்டமாக காத்திருப்பதும், இடம் கிடைக்காமல் முண்டி தள்ளுவதும், ரயில் கதவை திறக்காதவர்கள் மீது தண்ணீர் ஊற்றுவதுமான காட்சிகள் உள்ளது. இதை ஷேர் செய்து பதிவிட்டுள்ள கேரள காங்கிரஸ் “பிரதமர் மோடியின் தொகுதியான கியோட்டோ அல்லது வாரணாசியிலிருந்து காட்சிகள். இதைத்தான் அவர் தனது சொந்த வாக்காளர்களுக்காக வழங்கியுள்ளார். நாட்டின் மற்ற பகுதிகளை மறந்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்