இன்று சென்னை வருகிறார் ராகுல் காந்தி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

Siva

செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (13:30 IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வரவிருக்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அதன் பின்னர் ராகுல் காந்தி இன்று மாலை ரயிலில் சென்னைக்கு வருவதாகவும், இன்று இரவு சில மணி நேரங்கள் சென்னையில் தங்கி இருந்த பிறகு, விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை வரும் ராகுல் காந்தியை வரவேற்க, காங்கிரஸ் பிரபலங்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் சென்னை வருகை பரபரப்பை ஏற்படுத்தினாலும், அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளாரா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை சந்திக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்